இவ்வியக்கதில் இணையும் உறுப்பினர்களுக்கான இயக்கத்தின் நடைமுறைகள்

அரசு அங்கீகாரம் பெற்ற பதிவு எண் : BK IV 5/2020


வயது வரம்பு உறுப்பினர்கள்:

  • தமிழன் கட்டிட தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தில் உறுப்பினர்களாக 18 வயது முதல் 59 வயது வரை பதிவு செய்து கொள்ளலாம்.

தொழில் சார்ந்த குடும்பத்தில்:

  • சிறு வயதில் பதிவு செய்தவர்களுக்கு திருமண உதவி கட்டாயம் கிடைக்கும். ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தாலும் சரி, இரண்டு நபர்கள் இருந்தாலும் சரி, அனைவருமே பதிவு செய்து உறுப்பினராகிக் கொள்ளலாம். இது தங்கள் குடும்பத்திற்கும், வாரிசுகளுக்கும் ஓர் உதவியாக இருக்கும். நாம் என்ன கொண்டு வந்தோம், என்ன கொண்டு செல்ல, இந்த இயக்கம் நமக்காக ஒரு உதவி செய்யும்.

உறுப்பினர்கள்:

  • இந்த இயக்கமானது அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றிபெற வேண்டும். அதற்கு உறுப்பினரான தாங்களும், என்றும் ஒத்துழைப்பை மறவாது அளிக்க வேண்டும்.

ஒரு வருடம்:

  • இயக்கத்தில் அனைத்து சேவைகளும் ஒரு வருடத்திற்க்குப் பிறகே வழங்கப்படும். உறுப்பினர்கள் பதிவு செய்து ஒரு வருடம் சந்தாவைக் கட்டிய பிறகுதான் உதவி என்ற ஒன்று வழங்கப்படும். கட்டாயம் அனைவரும் மாத சந்தாவைத் தொடர்ந்து கட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

சந்தா தொகை (மாதம் 100 + 250):

  • இந்த இயக்கத்தில் மாத சந்தா தொகையினை (250 மற்றும் 100) தங்கள் வசதிக்கேற்ப செலுத்தி உறுப்பினர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

சேமிப்பு:

  • நாம் நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வகையில் செய்யும் செலவுகள் அனைத்தும் வீடு வந்து சேர்வதில்லை. ஆனால் இந்த இயக்கத்தில் ஒரு நாளைக்கு 3 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை வீதம் எடுத்து வைத்தால் கூட இந்த இயக்கத்தின் மாத தொகையினை எளிதாக செலுத்திவிடலாம். நாம் செலுத்தும் மாத சந்தா தொகையானது செலவு அல்ல எதிர்காலத்திற்க்கான சேமிப்பாகும். நாம் கட்டிய தொகையானது இருமடங்காக வந்து சேர்வதோடு மட்டுமல்லாமல் விபத்துக்கள் அனைத்திற்க்கும் உதவிகள் வழங்கப்படும்.

அதுபோல் இயக்கத்தில் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் நான் மனப்பூர்வமாக விருப்பு, வெறுப்பு இன்றி ஒத்துழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

© 2024 TKTMI. All rights reserved | Design by TKTMI.